இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை - சிறுவனுக்கு நண்பர்களால் கொடூரம்!

Attempted Murder Delhi Sexual harassment Child Abuse
By Sumathi Oct 01, 2022 08:18 AM GMT
Report

10 வயது சிறுவனை அவனது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்தவன் 10 வயது சிறுவன். இவன் அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், சம்பவத்தன்று மாலை கிரிக்கெட் விளையாடுவதாக கூறி அக்கம்பக்கத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் சிறுவனை அழைத்து சென்றுள்ளனர்.

இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை - சிறுவனுக்கு நண்பர்களால் கொடூரம்! | 10 Year Old Boy Rape Delhi

அவனை வெறிச்சோடிய ஒரு இடத்தில் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிறுவன் மறுத்ததால், அந்த 3பேரும் சிறுவனை கல் மற்றும் கம்பியால் தாக்கினர். அதற்குப் பிறகு சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் ஒரு தடியை வைத்துள்ளனர்.

சிறுவன் உயிரிழப்பு  

இறுதியில் வீட்டிற்கு வந்த சிறுவன் யாரிடமும் எதுவும் கூறவில்லை. குடும்பத்தினர் கேட்டபோது, ​​தகராறு நடந்ததாக மட்டும் தெரிவித்துள்ளான். அதனைத் தொடர்ந்து, அச்சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்டான்.

இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை - சிறுவனுக்கு நண்பர்களால் கொடூரம்! | 10 Year Old Boy Rape Delhi

அப்பொது அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு மைனர் சிறுவர்களை கைது செய்த போலீசார், தவறான நடத்தை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கொடூர சம்பவம் 

அந்த இரண்டு சிறுவர்களும் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர், அங்கிருந்து அவர்கள் சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில், சிறுவன் மருத்துவமனியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இந்த வழக்கில், டெல்லி மகளிர் ஆணையம் போலீசாருக்கு நோட்டீஸ் கொடுத்து, செப்டம்பர் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.