10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி.. சிறுவன் வெறிச்செயல் - அதிர்ச்சி வாக்குமூலம்!
சிறுமியை பள்ளி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் செயல்
தெலங்கானா, முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா - ரேணுகா தம்பதியின் மகள் சஹஸ்ரா. இந்த 10 வயது சிறுமி 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சஹஸ்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தொடர்ந்து வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் சஹஸ்ரா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
உடனே தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சஹஸ்ராவின் பள்ளியில் 10 வது படிக்கும் ஒரு மாணவன் வந்து செல்வது பதிவாகி இருந்தது. அந்த மாணவனை விசாரித்ததில்,
அதிர்ச்சி வாக்குமூலம்
சஹஸ்ராவின் வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது, சஹஸ்ரா சத்தம் போட்டதால், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதற்கிடையில் சஹஸ்ராவின் உடலில் 20 இடங்களில் கத்திக் குத்து காயம் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை எப்படி திருட வேண்டும் என்று
அவர் கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். தற்போது மாணவனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.