நிலத்தடி நீரை பயன்படுத்த ரூ.10 ஆயிரம் - தமிழக அரசு விளக்கம்..!

Tamil nadu Government of Tamil Nadu Government Of India
By Thahir Jul 07, 2022 12:02 AM GMT
Report

நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் மத்திய நீர்வளத் துறையின் இணையதளம் மூலமாக ரூ.10,000 கட்டணம் செலுத்தும் திட்டம் தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீருக்கு கட்டணம்

நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவு கணக்கிடப்பட்டு,அதற்கு கட்டணம் நிா்ணயம் செய்வதற்கு தண்ணீா் கொள்கை 2012 என்கிற புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நிலத்தடி நீரை பயன்படுத்த ரூ.10 ஆயிரம் - தமிழக அரசு விளக்கம்..! | 10 Thousand To Use Ground Water

இதனால்,வீடுகள் மற்றும் வேளாண் உள்பட நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் அனைவரும் மத்திய நீர்வளத் துறையின் இணையதளம் மூலமாக ரூ.10,000 கட்டணம் செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும்,

மாறாக,மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு விளக்கம்

இந்நிலையில்,நிலத்தடி நீருக்கு ரூ.10,000 கட்டணம் என்ற மத்திய நிலத்தடி நீர் ஆதாரவள ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீரை பயன்படுத்த ரூ.10 ஆயிரம் - தமிழக அரசு விளக்கம்..! | 10 Thousand To Use Ground Water

மேலும்,நிலத்தடி நீர் பாதுகாப்பு,நீர் எடுத்தல் தொடர்பாக நடைமுறையில் உள்ள விதிகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.