கார் பார்க்கிங்கில் இருந்த 10 அடி நீளமுள்ள பாம்பு..பீதியான மக்கள் - அடுத்து நடந்த சம்பவம்!
குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த 10 அடி நீள பாம்பு பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பார்க்கிங்கில்..
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. நேற்று இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது இந்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்துள்ள பொழிச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை
பாம்பு
பின்புறம் ஞானமணி நகர் 6-வது தெருவில் மழைநீரில் அடித்து வரப்பட்ட பெரிய மலைப் பாம்பு ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் மிகவும் அச்சமடைந்தனர்.
உடனே அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மற்றும் வனதுறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் வனத் துறை குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்த மலைப்பாம்பை
சுமார் 30 நிமிடம் போராடி பிடித்து சென்றனர். மலைப்பாம்பை பிடித்துச் சென்றவுடன் அப்பகுதி குடியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.