டுவிஸ்ட் கொடுத்த வங்கக்கடல்..சென்னை தப்பித்துவிட்டதா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!

Chennai TN Weather Cyclone Social Media
By Swetha Oct 16, 2024 05:16 AM GMT
Report

சென்னையில் அதிக கனமழைக்கு வாய்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்டேட்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. நேற்று இரவு முதல் தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

டுவிஸ்ட் கொடுத்த வங்கக்கடல்..சென்னை தப்பித்துவிட்டதா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்! | There Will Be No Heavy Rain Weatherman Updates

இந்த நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், திருவள்ளூர்,சென்னை,செங்கல்பட்டு, மக்களுக்கு நல்ல செய்தி உள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்ப்பார்க்கபட்டாலும், காற்று கடக்கும் பகுதி சென்னைக்கு வாடக்கே இருக்கும் என்பதால் மக்கள் சற்று இளைப்பாறலாம்.

தேவையின்றி வெளியே வர வேண்டாம்.. மின்சாரம் சீராக உள்ளது- துணை முதல்வர் அறிவுரை!

தேவையின்றி வெளியே வர வேண்டாம்.. மின்சாரம் சீராக உள்ளது- துணை முதல்வர் அறிவுரை!

வெதர்மான் 

முக்கிய காற்றழுத்த தாழ்வுநிலையில் இருந்து இன்று பெய்ய இருந்த கனமழை நமக்கு கிடைக்கப்போவதில்லை. சாதாரண மழை பெய்யலாம். நாம் பாக்கிறப்படி காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.

டுவிஸ்ட் கொடுத்த வங்கக்கடல்..சென்னை தப்பித்துவிட்டதா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்! | There Will Be No Heavy Rain Weatherman Updates

சென்னையில் 18 - 20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக தான் இருக்கும். எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. என்று தெரிவித்து உள்ளார்.