சந்திராயன் நிலவில் தரையிறங்க அந்த 15 நிமிடம்; 40 நாள் பயணம் - இதுதான் விவரம்!

Indian Space Research Organisation
By Sumathi Jul 15, 2023 04:34 AM GMT
Report

சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து தரையிரங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான்-3

ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது செலுத்து தளத்தில் இருந்து நேற்று பிற்பகல் 02:35 மணி 17 நொடிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திராயன் நிலவில் தரையிறங்க அந்த 15 நிமிடம்; 40 நாள் பயணம் - இதுதான் விவரம்! | 10 Crucial Stages For Chandrayaan 3 Full Details

எல்.வி.எம் 3 ராக்கெட், பூமியின் தரைப்பரப்பில் இருந்து 170 கிலோமீட்டர் உயரத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தைக் கொண்டு சென்று நிலைநிறுத்தும். தொடர்ந்து, விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும். அதன்பிறகு, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலனை அனுப்பும்.

40 நாள் பயணம்   

சம ஈர்ப்பு விசைப்புள்ளிக்கு சந்திரயான் 3 விண்கலத்தைச் செலுத்தும். விண்கலம் பாதை மாறிவிடாமல் இருக்கு பிசிறுகளைச் சரிசெய்துகொண்டே இருக்கும். நிலவின் ஈர்ப்புவிசை வட்டத்திற்குள் செல்ல உந்துதல் கொடுக்கப்படும். விண்கலனை நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்ற வைக்கவேண்டும்.

சந்திராயன் நிலவில் தரையிறங்க அந்த 15 நிமிடம்; 40 நாள் பயணம் - இதுதான் விவரம்! | 10 Crucial Stages For Chandrayaan 3 Full Details

சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் நிலவைச் சுற்றி வட்டமாகச் சுற்ற வைக்கும். அடுத்த பதினைந்து நிமிடங்களில்தான் இந்த முழு திட்டமும் வெற்றி பெறுமா இல்லையா என்பதே அடங்கியுள்ளது. லேண்டரை அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் முதல் குறைந்தபட்சமாக 30 கிலோமீட்டர் வரை நீள்வட்டப் பாதையில் செலுத்துவார்கள்.

அனைத்தும் திட்டமிட்டப்படி நடைபெறும் பட்சத்தில் ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி மாலை 5.47 மணியளவில் லேண்டர் நிலவில் தரையிறங்கும். அதன்பின், ரோவர் வாகனம் ஆய்வுப்பணியில் ஈடுவதாகக் கூறப்படுகிறது.