நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 3 விண்கலம்..!

Indian Space Research Organisation
By Thahir Jul 14, 2023 09:05 AM GMT
Report

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் - 3 விண்கலம் நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது.

விண்ணில் பாய்ந்தது சந்திராயன் - 3

'சந்திரயான் 3' விண்கலத்தில் உள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற எந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் பகுதியை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டு உள்ளது.

நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 3 விண்கலம்..! | Chandrayaan 3 Spacecraft Launched

பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும் பகுதியாகும். ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும். இந்த 3 பகுதிகளுக்கும் இடையே ரேடியோ அலைவரிசையும் பரிசோதிக்கப்பட்டு உள்ளது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 1/2 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. முழுமையாக கவுண்டவுன் முடிந்தவுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, இன்று மதியம் 2 மணி 35 நிமிடம் 17 வினாடியில் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ஆகஸ்ட் 23 அல்லது ஆகஸ்ட் 24 ஆம் தேதி தரையிறங்கும் 

நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான 'சந்திரயான்-3', விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது 

விண்ணை நோக்கி செல்லும் சந்திரயான் 3 விண்கலம் 16 நிமிடங்களில் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 23 அல்லது ஆகஸ்ட் 24 ஆம் தேதி தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நிலவை நோக்கி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் - 3 விண்கலம்..! | Chandrayaan 3 Spacecraft Launched

நிலவின் தென்துருவம் பற்றி ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. நிலவின் பரப்பில் இருக்கும் வெப்பநிலை, மண்ணின் தன்மை பற்றி ஆராய்கிறது சந்திரயான் 3.

மின்னுாட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை குறித்தும் ஆய்வு செய்கிறது சந்திரயான் 3. லேண்டர், ரோவர் உள்ளிட்டவற்றுடன் சந்திரயான் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவை ஆய்வு செய்வதற்காக 2008ல் சந்திரயான் 1 , 2019 ல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.