உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் - எது தெரியுமா?
உலகிலேயே மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிறிய நாடு
இன்றைய காலக்கட்டத்தில் அமெரிக்கா, சீனா , ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளது. இதற்கு மாறாக இப்போது உலகின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட முதல் 10 நாடுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வாடிகன் சிட்டியில் சிவில் சட்டங்கள் காரணமாக அதிக மக்கள் தொகை இல்லை. இது ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமாகவும் உள்ளது.டோக்கெலாவ் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடு ஆகும்.
மக்கள் தொகை
இங்கு மக்கள் தொகை 1,915 பேர் ஆகும்.நியுவே பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு. இங்கு சுமார் 1,935 பேர் வசிக்கின்றனர்.இந்த நாட்டில் பொருளாதார வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாததே, மக்கள் தொகை குறைவாக இருப்பதற்கு காரணமாகும்.
துவாலு 9 சிறிய தீவுகளைக் கொண்ட நாடு ஆகும். 11,478 மட்டுமே இந்த நாட்டில் வசிக்கின்றனர்.நௌரு மைக்ரோனேசிய தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு.இந்நாட்டின் மக்கள் தொகை 12,884 ஆகும். செயிண்ட் பார்த்தலெமியில் 11,019 பேர் வசிக்கின்றனர்.