வாரத்துக்கு 42 மணி நேரம்தான் வேலை; ஆனால் ரூ.1.5 கோடி வரை சம்பளம் - எங்கு தெரியுமா?

Scotland
By Sumathi Mar 17, 2025 01:33 PM GMT
Report

தீவு ஒன்றில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

உயிஸ்ட் - பென்பெகுலா

ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரு தீவுகள் அமைந்துள்ளன. அங்கு 40 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

scotland

இந்நிலையில் கோடைக்காலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆட்சேர்ப்பில் மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

80 ஆண்டுகளாக கணவருக்கு காத்திருந்த 103 வயது மூதாட்டி - இறுதியில் நேர்ந்த சோகம்!

80 ஆண்டுகளாக கணவருக்கு காத்திருந்த 103 வயது மூதாட்டி - இறுதியில் நேர்ந்த சோகம்!

 

 ரூ.1.5 கோடி ஊதியம்

இது பிரிட்டன் மருத்துவர்கள் வாங்கும் ஊதியத்தை விட சுமார் 40% அதிகம். மேலும், இடமாற்ற உதவித்தொகையாக ரூ.8 லட்சமும், பணிக்கொடை ரூ.1.3 லட்சம், அலெவன்ஸ் ரூ.11 லட்சம் தனித்தனியாக வழங்கப்படும். இதன்படி, மொத்தமாக ஒரு மருத்துவருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி ஊதியமாக வழங்கப்படும்.

வாரத்துக்கு 42 மணி நேரம்தான் வேலை; ஆனால் ரூ.1.5 கோடி வரை சம்பளம் - எங்கு தெரியுமா? | 1 Lakh 50 Crore Salary For Doctors Island Details

இதற்கு வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் மட்டும் போதும். இங்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் கிராமப்புற மருத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் பணிபுரிந்த அனுபவமும் இருக்க வேண்டும். வெளியாட்களுக்கு மட்டுமே இங்கு பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.