என்னை இங்குதான் புதைச்சாங்க- மறுபிறவி எடுத்த சிறுவன்! வைரலாகும் உண்மை சம்பவம்
சிறுவன் ஒருவன் தன்னை கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறி இடத்தை அடையாளம் காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபிறவி
இஸ்ரேல், சிரியா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இதில் எல்லையில் உள்ள ஹோலன் குன்றுகள் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான விவகாரம் உள்ளது.
இந்த பகுதியில் ட்ரூஸ் இனக்குழுவை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களில் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையில் தலையில் நீண்ட, சிவப்பு நிற அடையாளம் ஒன்று இருந்துள்ளது.
இந்த குழந்தைக்கு 3 வயது கடந்த நிலையில், நன்றாக பேச தொடங்கியுள்ளது. அப்போது, தனது முந்தைய கால பிறவி பற்றி கூறியுள்ளார். அதில் தான் கோடரியால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டதாகவும், புதைக்கப்பட்ட இடத்தையும் கூறியுள்ளார்.
சிறுவன் சொன்ன தகவல்
இதனையடுத்து குடும்பத்தினர் அந்த இடத்திற்கு சென்று தோண்டி பார்த்துள்ளனர். அப்போது எலும்பு கூடு மற்றும் கோடரி கைப்பற்றப்பட்டது. மேலும், தன்னை கொலை செய்த நபரையும் சிறுவன் அடையாளம் காட்டியுள்ளார். அவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சிறுவனின் முழு கதையும் ஜெர்மன் டாக்டரான ட்ரூட்ஸ் ஹார்டோ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ட்ரூஸ் இனக்குழுவினரை பொறுத்தமட்டில் பிறக்கும் குழந்தையின் உடலில் ஏதேனும் அடையாளங்கள் இருப்பின் அந்த குழந்தை மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.