mayonnaise பிடிக்குமா? கவனம், இரு நாடுகளில் தடை- 75 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Saudi Arabia Death Junk Food
By Swetha May 16, 2024 05:05 AM GMT
Report

இரு நாடுகளில் இந்த மயோனைஸ் தடை செய்யபட்டு இருக்கிறது.

இரு நாடுகளில் தடை 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பொருளாக மயோனைஸ் எனப்படும் சாஸ் வகை உள்ளது. இது தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது. பெரும்பாலும் மெயின் டிஷ்க்கு தொட்டு சாப்பிடப்படும் மயோனைஸ் அதிகளவு உண்ணப்படுகிறது.

mayonnaise பிடிக்குமா? கவனம், இரு நாடுகளில் தடை- 75 பேர் மருத்துவமனையில் அனுமதி! | 1 Dead And 75 Hospitalized Who Ate Mayonnaise

இப்படியாக இந்த மயோனைஸ் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. இது குறித்து பல ஆய்வகள் தெரிவித்துள்ளது. இருப்பினும் இதன்மேல் உள்ள மோகம் குறைந்தபாடு இல்லை. அந்த வகையில், சவுதி அரேபியாவில் கடந்து சில நாட்களுக்கு முன் ஒரு உணவகத்தில் வைக்கப்பட்ட மயோனைஸ்ஸில் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா கண்டறியப்பட்டது.

உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: இவ்வளவு ஆபத்தா - மயோனைஸ் விற்பனைக்கு தடை!

உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: இவ்வளவு ஆபத்தா - மயோனைஸ் விற்பனைக்கு தடை!

மருத்துவமனை அனுமதி

இதை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பிராண்டு மயோனைஸ்க்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்தது. மேலும் இம்மாதிரியான உணவுப்பொருளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் நுகர்வோருக்கு உறுதியளித்து இருக்கிறது.

mayonnaise பிடிக்குமா? கவனம், இரு நாடுகளில் தடை- 75 பேர் மருத்துவமனையில் அனுமதி! | 1 Dead And 75 Hospitalized Who Ate Mayonnaise

அதேபோல கடந்த வாரம் ரியாத் பகுதியில் ஹம்பர்கினி உணவகத்தில் பரிமாறபட்ட இந்த மயோனைஸ் பலரது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதன் காரணமாக ஒருவர் உயிரிழக்க 75 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து சவுதி அரேபியா முழுவதும் குறிபிட்ட பான்டும் மயோனைஸ் பிராண்ட் விநியோகம் நிறுத்தபட்டது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், உணவகத்தில் வழங்கப்பட்ட மயோனைஸ் மாதிரியில் பொட்டுரிலிம் பாதிப்பை ஏற்படுத்தும் க்ளோஸ்ட்ரிடியம் போட்யூடிலினம் பாக்டீரியா இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த மயோனைஸ் உட்கொண்ட அனைவருக்கும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.