மீண்டும் வெடித்த கலவரம்.. மணிப்பூரில் மீண்டும் உச்சகட்ட பதற்றம் - என்ன ஆச்சு?
மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மேலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குச் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டர்.பலர் வீடுகளை இழந்து அகதிகளாக வசித்து வருகிறனர். கடந்த 2 ஆண்டுகளாக நீடிக்கும் கலவரத்துக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
இதற்கிடையே அம்மாநில முதல்வர் பைரேன்சிங் கடந்த 9 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.நாட்டிலேயே அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமாக மணிப்பூரே உள்ளது.
துப்பாக்கிச் சூடு
இங்கு 11 முறை இதுவரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரில் பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது.தலைநகர் இம்பாலில் இருந்து சேனாபதி மாவட்டத்திற்குப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
காங் போக்பி வழியே சென்ற பேருந்தைச் சிலர் மறித்து அடித்து நொறுக்கினர். பேருந்தின் மீது கற்களை வீசி வன்முறையாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது