Thursday, Feb 27, 2025

ரோட்டில் சிதறி கிடந்த ரூ1.80 லட்சம், தம்பதி செய்த செயல் - அந்த மனசு தான் சார் கடவுள்!

Tamil nadu Tamil Nadu Police Money
By Vinothini 2 years ago
Report

தென்காசி மாவட்டத்தில் ரோட்டில் கிடந்த பணத்தை எடுத்து இளம் தம்பதி செய்த காரியம் பரவலாகி வருகிறது.

தம்பதி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். 35 வயதான இவர் நேற்று இரவு நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் நல்லூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்.

1-80-lakh-scattered-on-road-couple-reported

அப்பொழுது அந்த சாலையில் 500ரூ நோட்டுகள் சிதறிக்கிடந்தன. ஜெயபிரகாஷ் அந்த ரூபாய் நோட்டுகளை மனைவியுடன் சேர்ந்த சேகரித்தார்.

பாராட்டு

இதனை தொடர்ந்து, அந்த பணத்தினை எண்ணி பார்த்ததில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது. பின்னர் அந்த பணத்தை தம்பதியினர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஒப்படைத்தார்.

1-80-lakh-scattered-on-road-couple-reported

அவர்களின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர். மேலும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பரவி வந்த நிலையில் அந்த தம்பதியினரை பாராட்டி வருகின்றனர்.