World Cup: தோல்வியடைந்த இந்தியா; உலக சாதனை படைத்த ரசிகர்கள் - எப்படி தெரியுமா?
இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரை 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது
உலகக்கோப்பை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி 6 வாரக் காலங்களாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரை 1.25 மில்லியன் ரசிகர்கள் நேரில் கண்டுகளித்ததாக ஐசிசி தெரிவித்துள்ளது.
ரசிகர்களால் சாதனை
45 நாட்கள் நடைபெற்ற இந்த தொடரை 12,50,307 ரசிகர்கள் மைதானத்துக்கு நேரில் வந்து கண்டுகளித்து உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னர், கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடரை 1,016 மில்லியன் ரசிகர்கள் நேரில் பார்த்ததே சாதனையாக இருந்தது.
தற்போது அந்த இந்தியாவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை தொடர் அந்த சாதனையை முறியடித்துள்ளது. உலகக்கோப்பையை இந்திய அணி தோற்றது இந்திய ரசிகர்களுக்கு மன வேதனையாக இருந்தாலும், இந்தியாவில் படைக்கப்பட்ட இந்த சாதனை ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.