பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன் - குவியும் வாழ்த்துக்கள்!

Aari Lakshmi Menon Tamil Cinema
By Sumathi Feb 08, 2024 02:30 PM GMT
Report

 லட்சுமி மேனன் கமிட்டாகியுள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 லட்சுமி மேனன் 

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன்(27).

lakshmi-menon

தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அதன்பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.

அப்போதுதான் அவரை லவ் பண்ணேன்;; ரகசியமா பேசுவேன், ஆனால்.. லட்சுமி மேனன் ஓபன் டாக்!

அப்போதுதான் அவரை லவ் பண்ணேன்;; ரகசியமா பேசுவேன், ஆனால்.. லட்சுமி மேனன் ஓபன் டாக்!

உண்மைச் சம்பவம்

அதனையடுத்து, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மெட்ராஸ் டெக் நிறுவனம் சார்பில் அருணாச்சலம் அனந்தராமன் தயாரிக்கும் படம் ஒன்றில் லட்சுமி மேனன் நாயகியாக நடிக்கிறார்.

பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன் - குவியும் வாழ்த்துக்கள்! | Lakshmi Menon To Pair Bigg Boss Aari Viral

உண்மைச் சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்தில் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், ‘மைம்' கோபி, வையாபுரி, ப்ளாக் பாண்டி, ஷெர்லி பபித்ரா, கனிமொழி உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதன் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ந்து ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.