பழனியில் சுரைக்காய் விலை கடும் வீழ்ச்சி... விவசாயிகள் கவலை
பழனியில் சுரக்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தக்காளி, சுரைக்காய் உள்ளிட்ட காய்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
இப்பகுதியில் விளையும் சுரைக்காய்கள் பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் காய்கறிசந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம்.
இந்நிலையில் தொடர்ந்து சுரைக்காய் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் சுரைக்காய்களை பறிக்காமல் செடியிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுரைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது :- பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி அதிகளவில் பயிரிட்டுள்ளோம். தற்போது ஒருகிலோ சுரைக்காய் 1ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுரைக்காயை பறித்து வாடகை ஆட்டோவில் மார்க்கெட் கொண்டு செல்லும் செலவை விட மிகவும் குறைவாக விற்பனை செய்யப்படுவது வேதனை அளிக்கிறது.
இதன்காரணமாக ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்றும், ஏற்கனவே தக்காளி போன்ற பயிர்கள் விலை இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது சுரைக்காயும் தற்போது விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.Zucchini
எனவேஅனைத்து காய்களுக்கும் குறைந்த பட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.