30 நிமிஷத்துல இமெயில் பாருங்க - 1300 ஊழியர்களை பணிநீக்கம் செய்து ஷாக் கொடுத்த Zoom
30 நிமிடங்களில் இமெயில் செக் செய்ய கூறி ஊழியர்களுக்கு ஜூம் நிறுவனம் அதிர்ச்சி அளித்துள்ளது.
Zoom
கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், ட்விட்டர் என உலகின் முன்னணி நிறுவனங்கள் தொடங்கி பெரும்பாலானா டெக் சார்ந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, Zoom நிறுவனமும் தற்போது பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எரிக் யுவான் அறிவிப்பில், ''நீங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஊழியர்கள் என்றால் அடுத்த 30 நிமிடங்களில் உங்கள் இமெயில் இன்பாக்ஸை செக் செய்யுங்கள். அதில் பணிநீக்க நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வந்திருக்கும்.
பணிநீக்கம்
அமெரிக்கா அல்லாத நாடுகளை சேர்ந்தவர்கள், அந்தந்த தலைமை மூலம் தெரிந்துகொள்ள முடியும். பெருந்தொற்று காலத்தில் ஜூம் செயலியின் தேவை பன்மடங்கு அதிகரித்தது. அப்போது, நமது தலைசிறந்த ஊழியர்கள் தங்களுக்கு வந்த சவாலை சிறப்பாக எதிர்கொண்டு தேவையை நிறைவேற்றினர்.
ஆனால், பெருந்தொற்றுக்குப் பின் தற்போது நிலவும் அசாதாரண பொருளாதார சூழல் காரணமாக இந்த பண்நீக்க முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார். மொத்தம் 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும், நிறுவனத்தை விட்டு வெளியேறும் அமெரிக்க ஊழியர்களுக்கு 4 மாத சம்பளத்தை வழங்கவுள்ளோம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.