போதை மருந்தால் தோல் அழுகி சோம்பியாக மாறும் மக்கள் - திடுக்கிடும் வீடியோ
சோம்பி ட்ரக் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
போதை மருந்து
அமெரிக்கா, பிலடெல்பியா கிழக்கு கடற்கரையில் 2 வது பெரிய நகரமாகும். இங்கு, கென்சிங்டன் என்ற பகுதியில் சைலாசின் அல்லது 'டிராங்க்' என்று அழைக்கப்படும் போதை மருந்தை பலர் எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால், அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தோல் அழுகுதல் உள்ளிட்ட கொடிய அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது. மேலும், வெள்ளை மாளிகை சமீபத்தில் இந்த போதை மருந்தை "வளர்ந்து வரும் அச்சுறுத்தல்" என்று அறிவித்தது.
அதிர்ச்சி வீடியோ
பிலடெல்பியா சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரம் தொற்றுநோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிலடெல்பியாவின் சுகாதாரத் துறை மற்றும் சுகாதார வாரியம் கூறுகையில், "சைலாசின் பிலடெல்பியாவை கடுமையாக தாக்கியது.
அதிக அளவு இறப்புகள் மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துகிறது. இது செப்சிஸ் மற்றும் உடல் பாகங்கள் துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.