ஒரு பீட்சா வாங்குற கேப்ல ட்விட்டரை வாங்கிட்டிங்கலே .. வைரலாகும் சொமேட்டோவின் ட்வீட்
உலகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உலகின் முதல் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறிவந்தார்.

இதை உறுதி செய்யும் விதமாக அண்மையில் ட்விட்டரின் 9.1 சதவீத பங்குகளை வாங்கினார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தை இந்தியரான பராக் அகர்வால் தற்போது வழிநடத்தி வரும் நிலையில், ட்விட்டர் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு , ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.
அதன்படி ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் எப்போது அதிகாரபூர்வமாக தொகை பரிமாற்றம் நடக்கும்.
எலான் மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டர் நிறுவனத்தை வழிநடத்த போவது யார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை. இது குறித்து எலான் மஸ்க் கூறும் போது , "நான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை. சுதந்திரமாக பயனர்கள் கருத்துத் தெரிவிக்க ஒரு வலைதளத்தை கட்டமைக்கும் நோக்கில் ட்விட்டரை வாங்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
elon musk takes lesser time in buying companies than I do in deciding what pizza to order
— zomato (@zomato) April 25, 2022
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, “என்ன பீட்சா வாங்கலாம் என்று முடிவெடுப்பதற்கும் குறைவான நேரத்தில் நிறுவனங்களை வாங்கும் முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துவிடுகிறார்” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளது.