காபியில் சிக்கனா? ஆவேசத்தில் கஸ்டமர்-முழிக்கும் சோமேட்டோ!

By Sumathi Jun 04, 2022 11:28 AM GMT
Report

சோமேட்டோ மூலம் ஒருவர் ஆர்டர் செய்த காபியில் சிக்கன் துண்டு இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காபில சிக்கன்:

டெல்லியைச் சேர்ந்த சுமித் சவுரப் என்ற நபர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.அதில், சோமேட்டோ செயலி மூலம் காஃபி ஒன்றை ஆர்டர் செய்தேன். அந்த காபியில் ஒரு சிக்கன் துண்டு இருந்தது.இன்றுடன் உங்களுக்கும் எனுக்குமான தொடர்பு முடிந்தது எனத் தெரிவித்துள்ளார்.

சோமேட்டோவின் விளக்கம்:

இதற்கு சோமேட்டோ நிறுவனம் சார்பில் ஒரு பதில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதையும் அந்த நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவருக்கு வருத்தம் தெரிவித்துவிட்டு சோமேட்டோ நிறுவனம் தன்னுடைய ப்ரோ வாடிக்கையாளர் வசதியை அவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதை பதிவிட்டு அவர் இப்படி ஒரு தவறை செய்துவிட்டு நீங்கள் என்னுடைய மதிப்பை நீங்கள் பெற முடியாது எனப் பதிவிட்டுள்ளார்.

காபியில் சிக்கனா? ஆவேசத்தில் கஸ்டமர்-முழிக்கும் சோமேட்டோ! | Zomato Get Coffee With Chicken Piece In It

இந்த சம்பவம் தொடர்பாக காஃபி கடை ஒரு பதில் பதிவை செய்துள்ளது. அதில், சுமித் இந்த தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம். உங்களுடைய விவரங்களை அனுப்புங்கள் எங்களுடைய குழு உங்களை தொடர்பு கொள்ளும் எனப் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் வாசிகள் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.