விபத்தில் பலியான ஊழியர்: குடும்பத்துக்கு ஓடிவந்து உதவிய சொமேட்டோ

Zomato Zomato staff killed by accident
By Petchi Avudaiappan Jan 13, 2022 06:04 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மதுபோதையில் வாகனம் ஓட்டிய போலீசாரால் விபத்தில் கொல்லப்பட்ட சொமேட்டோ ஊழியரின் குடும்பத்துக்கு உதவுவதாக சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் சொமேட்டோ டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வந்த சலீல் சவுத்ரி என்பவர் கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் ரோகிணி பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் கார் ஓட்டிவந்த போலீஸ் கான்ஸ்டபிள் சலில் திரிபாதி மீது காரை மோதினார்.

இதில் சம்பவ இடத்திலேயே சலில் திரிபாதி பரிதாபமாக உயிரிழந்தார். கார் ஓட்டிவந்த போலீஸ் கான்ஸ்டபிள் மகேந்திரா மதுபோதையில் இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது கணவரின் மரணத்துக்கு நியாயம் வேண்டுமெனவும், தன் வாழ்வே இருண்டுவிட்டதாகவும் சலில் திரிபாதியின் மனைவி சுசிதா திரிபாதி ட்விட்டரில் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, சலில் திரிபாதியின் குடும்பத்துக்கு உதவுவதாகவும், அவரின் மனைவி சுசிதாவுக்கு வேலைவாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்து நடந்த இரவில் இருந்து சலில் திரிபாதியின் குடும்பத்துடன் எங்கள் குழு உள்ளது. இறுதிச் சடங்கு செலவு உள்பட பல்வேறு செலவுகளுக்கு ஏற்கெனவே உதவி வழங்கியுள்ளோம். குடும்பத்துக்கு தேவையான இன்சூரன்ஸ் தொகை 10 லட்சம் ரூபாய் கிடைக்கவும் உதவி வருகிறோம்.

இத்துடன் சொமேட்டோ ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக 12 லட்சம் ரூபாய் திரட்டி சலிலின் குடும்பத்துக்கு உதவியுள்ளனர். இந்த கடினமான சூழலில் சலில் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்க தொடர்ந்து உடனிருப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.