இது என்ன ஒரு தேசிய பிரச்னையா? வாயை கொடுத்து வசமாக சிக்கிய சொமோட்டோ நிறுவனர்

Tamil Founder Zomato Deepinder Goyal Hindhi
By Thahir Oct 19, 2021 10:10 AM GMT
Report

அண்மையில் ட்விட்டரில் கஸ்டமர் ஒருவர் சோமாட்டோ ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனத்திடம் எழுப்பிய புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தான் ஆர்டர் செய்த உணவு டெலிவரி செய்யப்படாததை அடுத்து சொமாட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்புகொண்டு பேசிய விகாஷிடம் இணைப்பில் அந்தப் பக்கம் இருந்தவர் ‘இந்தி தேசிய மொழி.

உணவு ஆர்டர் செய்யும் எல்லோருக்கும் இந்தி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கூறியதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம்.

இந்தி தெரிய வேண்டுமென தமிழ்நாட்டில் சொன்னதுதான் சொமாட்டோ செய்த தவறு இதனால் கொதித்தெழுந்தது சோஷியல் மீடியா.

ட்ரெண்ட் செய்து அடித்த அடியில் பணிந்தது சொமாட்டோ. சமூக வலைதளத்தில் ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும்,

இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் அறிவித்துள்ளது சோமாட்டோ.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரியின் சிறிய பேச்சு தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது.

நம் நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய் விட்டாதா எனவும் இதற்கு யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பேச்சு மீண்டும் பூகம்போல் வெடிக்கத்தொடங்கியுள்ளது.ஹிந்தி மொழி மீதான முக்கியத்துவம் அதிகரித்து வருவதும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை யாரும் விட்டுக்கொடுக்க கூடாது என தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.