குவிந்த ஆர்டர்.. டெலிவரி செய்ய களத்தில் இறங்கிய ஜொமைட்டோ சி.இ.ஓ
ஜொமைட்டோ நிறுவனத்தின் சிஇஓ ஆர்டர்கள் அடுத்தடுத்து வந்ததை அடுத்து தானே களத்தில் இறங்கி உணவுடெலிவரி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜொமைட்டோ சி இ ஓ
புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு உணவு விநியோக சேவையை அதிகரித்த நிலையில் ஜொமைட்டோ சி.இ.ஓ தீபக் என்பவர் தனது அலுவலக பணியை ஒதுக்கிவைத்துவிட்டு உணவு டெலிவரி செய்ய கிளம்பிவிட்டார். இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
அதே சமயம் , அவரே உணவு டெலிவரி செய்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் அவர் உணவு டெலிவரி செய்வது இது முதல் முறை அல்ல கடந்த தீபாவளி அன்று கூட இதே போல் பிஸியாக இருந்த நேரத்தில் களத்தில் இறங்கி உணவு டெலிவரி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.