T20 World Cup 2022 - போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தானை டுவிட்டரில் கிண்டலடித்த Zomato..!
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
மெல்போர்னில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி அடைந்தது. ஆட்டமிழக்காமல் விராட் கோலி நின்று விளையாடி 82 ரன்களை குவித்தார்.
இது இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். சமூகவலைத்தளங்களில் இந்திய அணி வீரர்களையும், விராட் கோலியையும் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

டுவிட்டரில் கிண்டலடித்த சொமேட்டோ
இந்நிலையில், இந்த விளையாட்டு குறித்து சொமேட்டோ நிறுவனம் டுவிட்டரில் கிண்டலாக பதிவிட்டிருக்கிறது. இது தொடர்பாக, சொமேட்டோ தனது டுவிட்டர் பதிவில், "அன்பான பாகிஸ்தான் மக்களே...! நீங்கள் தோல்வியை ஆர்டர் செய்து இருந்தீர்களா? உங்களுக்கு சேவை செய்ய விராட் இருக்கிறார்." என்று பதிவிட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்த, கரீம் பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "நாங்கள் உணவு கட்டுப்பாட்டில் உள்ளோம், ஆகவே எதையும் ஆர்டர் செய்யவில்லை" என்று மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தானை டுவிட்டரில் கிண்டலடித்த Zomatoவின் பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
dear pakistan, ordered a defeat?
— zomato (@zomato) October 23, 2022
virat your service
We don't have cheat days ? https://t.co/zFa6friGAg
— Careem Pakistan (@CareemPAK) October 23, 2022