பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞர் - வைரலாகும் Video!

Viral Video India Telangana Zomato
By Jiyath Jan 03, 2024 08:20 AM GMT
Report

பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் குதிரையில் உணவு கொண்டு சென்றுள்ளார்.

பெட்ரோல் தட்டுப்பாடு

சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.

பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞர் - வைரலாகும் Video! | Zomato Agent Delivers Orders On Horse

இதனை எதிர்த்து நாடு முழுவதும் டேங்கர் லாரி, சரக்கு லாரி, டிரக், உள்பட பல்வேறு சரக்கு வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பதற்றமடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர்.

சாப்பிட்டது ரூ.279 பிரியாணி; அதிர்ஷ்டம் அடித்தது ரூ. 7 லட்சம் கார் - மகிழ்ச்சியில் வாலிபர்!

சாப்பிட்டது ரூ.279 பிரியாணி; அதிர்ஷ்டம் அடித்தது ரூ. 7 லட்சம் கார் - மகிழ்ச்சியில் வாலிபர்!

குதிரையில் டெலிவரி

அதேபோல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் குவிந்தனர்.

பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞர் - வைரலாகும் Video! | Zomato Agent Delivers Orders On Horse

இந்நிலையில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஐதராபாத்தின் சன்ஷல்குடா பகுதியைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் இளைஞர் இளைஞர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குதிரையில் உணவு கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.