பெட்ரோல் தட்டுப்பாடு: குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த இளைஞர் - வைரலாகும் Video!
பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர் குதிரையில் உணவு கொண்டு சென்றுள்ளார்.
பெட்ரோல் தட்டுப்பாடு
சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து நாடு முழுவதும் டேங்கர் லாரி, சரக்கு லாரி, டிரக், உள்பட பல்வேறு சரக்கு வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பதற்றமடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர்.
குதிரையில் டெலிவரி
அதேபோல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலும் உள்ள பெட்ரோல் நிலையங்களிலும் குவிந்தனர்.
இந்நிலையில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஐதராபாத்தின் சன்ஷல்குடா பகுதியைச் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் இளைஞர் இளைஞர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குதிரையில் உணவு கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‼️VIRAL | Zomato agent delivers orders on horseback in Hyderabad amid fuel shortage and strike.
— tikhna.drishti (@DrishtiTikhna) January 3, 2024
A video of a Zomato delivery agent riding a horse in protest of fuel shortages at petrol pumps in Hyderabad has gone viral.#Zomato #Hyderabad #Telangana #India pic.twitter.com/Z2tAMM9iAs