அக்., 24 தொடங்கி மிக எச்சரிக்கை இந்த ராசிக்கெல்லாம்.. உங்க ராசி என்ன?

Astrology
By Sumathi Oct 23, 2025 06:03 PM GMT
Report

கிரக நிலை மாற்றம், ஒரு சில ராசியினருக்கு எதிர்மறையான விளைவுகளை கொண்டு வரும்.

கடந்த அக்டோபர் 3, 2025 தொடங்கி துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த புதன், நாளை (அக்., 24) விருச்சிக ராசியில் குடியேறுகிறார். இவர் ஒரு சில ராசியினருக்கு எதிர்மறையான பலன்களையும் கொண்டு வருகிறார்.

அக்., 24 தொடங்கி மிக எச்சரிக்கை இந்த ராசிக்கெல்லாம்.. உங்க ராசி என்ன? | Zodiac Signs Negative Impacts Mercury Transit

ரிஷபம்

மகிழ்ச்சிக்கு இணையாக பிரச்சனைகளும், செலவுகளும் அதிகரிக்கும். ஒப்பந்தங்களை முடிக்க லஞ்சம் எனும் பெயரில் பணத்தை அதிகம் செலவு செய்ய வேண்டி இருக்கும். பணிகளை முடிப்பதில் தாமதமும், அலைச்சலும் காணப்படும். காதல் வாழ்க்கையில் உங்கள் விருப்பங்களுக்கு மாறாக உங்கள் காதல் துணை நடந்துக்கொள்ள, மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.  

கடகம்

குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும், குடும்ப உறவுகள் மத்தியில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இருப்பினும் இந்த பலன்களை பெற, உங்கள் நாவை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம். காரணம், உங்களை அறியாமல் நீங்கள் பேசும் சில வார்த்தைகள், மனஸ்தாபங்களை உண்டாகும், கிடைக்க வேண்டிய பலன்களை மாற்றியமைக்கும். 

விருச்சிகம்

உங்கள் நலனில் மட்டும் அல்ல வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல் நலனிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. வாகன ஓட்டிகள் கவனமாக இருங்கள், பாதுகாப்பு இல்லா பயணங்களை தவிர்த்திடுங்கள். நெருங்கிய உறவினர் ஒருவரின் இழப்பு, நெடுந்தூர பயணங்களுக்கு வழிவகுக்கும்.   

தனுசு

குடும்ப உறவுகளின் ஆரோக்கிய நிலையில் காணப்படும் பின்னடைவு, மருத்துவ செலவுகளை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தங்கள் கைவிட்டு செல்லும். உலோகம் சார்ந்த தொழில் செய்து வரும் நபர்கள், தங்கள் தொழிற்சாலையில் பொருட் சேதங்களை சந்திக்கலாம். இது, தங்கள் நிதி நிலையை கடுமையாக பாதிக்க கூடும்.