சனி வக்ர பெயர்ச்சி - ஏமாற்றமும் விரிசலும் தான் ; கூடுதல் கவனம் தேவைப்படும் 5 ராசிகள்
சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசியினர் பண இழப்பு, தோல்வி ஆகியவற்றை சந்திக்க உள்ளனர்.
சனி வக்கிர பெயர்ச்சி
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ள சனி பகவான், வக்கிர பெயர்ச்சி அடைய உள்ளார். வக்கிர பெயர்ச்சி என்பது பின்னோக்கி செல்வதாகும். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தில் உள்ள சனி ஜூன் 30-ம் தேதி முதல் பின்னோக்கி சதய நட்சத்திரத்திற்கு செல்கிறார். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி அன்று மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
ஜூன் 30-ம் தேதி முதல் சனி பகவானின் இந்த வக்ர பெயர்ச்சிக்கு எந்த ராசியினர் பாதிப்புக்குள்ளாகின்றனர் என்பதை பார்ப்போம்.
கடகம்
கடக ராசியினருக்கு ஏற்கனவே அஷ்டம சனி நடந்து கொண்டுள்ளது. தற்போது வரவுள்ள வக்ர சனி மேலும் சிக்கலை தர உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். மேலும் வேலை மற்றும் குடும்ப விஷயங்களில் சிக்கலை சந்திக்க நேரிடும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த காலத்தில் பெரிய நிதி இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் ஏமாற்றமும், வாழ்க்கைத்துணையுடனான உறவில் விரிசலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சனிக்கிழமைகளில் கருப்பு ஆடைகளை அணிவது நல்லது.
மகரம்
மகர ராசியினர் அனைத்து செயல்களிலும் கவனமாக செயல்பட வேண்டும். குடும்பம் மற்றும் பணியிடத்தில் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதால், வார்த்தைகளில் கவனம் அவசியம். திருமண வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் சிக்கலில் இருந்து தப்பலாம்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியான சனி வக்ர நிலையில் இருப்பது பல பிரச்னைகளை தர உள்ளது. அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். வேறு நிறுவனத்துக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சியை ஒத்திவைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் எண்ணத்தையும் தள்ளிப்போடவும். திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்வது பாதிப்பை குறைக்கும்.
மீனம்
மீன ராசியினர் இந்த காலத்தில் தொழிலில் பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன், வாக்குவாதத்தில், ஈடுபடுவதை தவிர்த்து அனுசரித்து செல்வது நல்லது. திருமண வாழ்க்கையில் உள்ளவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. சனிக்கிழமைகளில் மீன்களுக்கு உணவு வழங்குவது நல்லது.