2025 ல் நடக்கும் சனி பெயர்ச்சி..இந்த 5 ராசிகளுக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்க போகுது!
2025 ல் சனி பெயர்ச்சியால் பாதிக்கபடும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் தவறான இடத்தில் சனி பகவான் சென்று அமர்ந்திருந்தால் அந்த ஜாதகருக்கு சனி தோஷம் ஏற்படும். அதே போல் ஜனன ஜாதகத்தில் சனியின் நீச்சமாக இருந்தாலும் சனி தோஷம் ஏற்படும்.
அது மட்டுமல்ல சனி பகவான், செவ்வாய், சந்திரன் அல்லது ராகு ஆகிய கிரகங்களுடன் இருந்து இருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தில் அதை சனி தோஷம் என்பார்கள். இப்படி சனியால் ஏற்பட்ட தோஷம் விலகி, வாழ்க்கையில் நன்மைகள் நடக்க சனி பகவானிடம் தான் முறையிட வேண்டும்.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டு மார்ச் 28, ஆம் தேதி சனி கும்பத்திலிருந்து மீன ராசிக்கும் நுழையும். இதனால் 5 ராசிகாரர்களுக்கு கெட்ட நாட்கள் தொடங்கும்.
மேஷம்
மேஷ ராசிக்கு ஏழரை சனி மார்ச் 28, ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதனால் இந்த ராசிகார்கள் பண இழப்பு, வேலை, மன கசப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மீனம்
இந்த ராசியில் ஏழரை சனியின் தாக்கம் இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஏதேனும் அதிஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் சட்ட சிக்கலில் சந்திக்க கூடும். விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கும்பம்
கும்ப ராசிகாரர்களுக்கு ஏழரை சனியால் மரியாதை குறையும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் நிலைமை மாறி மாறி வரும். உடலில் பழைய நோய்கள் மீண்டும் தொந்தரவு கொடுக்கும்.
தனுசு
தனுசு ராசியில் அஷ்டம சனியின் தாக்கம் இருக்கும் . இந்த காலக்கட்டத்தில் டென்ஷன் அதிகரிக்கலாம். குழப்பம் ஏற்படும். வேலையில் அலைச்சல் உண்டாகும். பண இழப்பு ஏற்படும்.
சிம்மம்
சிம்மத்தில் அஷ்டம சனி இருக்கும். இந்த ராசிகாரர்களுக்கு ஆரம்பித்த வேலைகள் தடைப்படலாம். உடல்நலத்திற்காக அலைச்சல் ஏற்படும். லாப வாய்ப்புகள் கை நழுவிப்போகும்.