Wow... பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியை நடனமாடி கொண்டாடிய ஜிம்பாப்வே வீரர்கள் - வைரல் வீடியோ...!
பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் மாஸா நடனமாடி வெற்றியை கொண்டாடிய ஜிம்பாப்வே அணியினரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பாகிஸ்தானை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே
நேற்று T20 உலகக் கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் நேருக்கு நேர் மோதியது. முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்திருந்தது.
இதற்கு பின் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. T20 உலகக் கோப்பையில் 2வது போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
நடனமாடிய ஜிம்பாப்வே அணி
இந்நிலையில், பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜிம்பாப்வே அணியினர் கிரிக்கெட் மைதானத்தில் மாஸான நடனமாடி அசத்தியுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Celebrating yet another terrific performance! ??#PAKvZIM | #T20WorldCup pic.twitter.com/0UUZTQ49eB
— Zimbabwe Cricket (@ZimCricketv) October 27, 2022