ஒவ்வொரு முறையும் ஷூவை ஒட்ட முடியவில்லை... ஸ்பான்சர் செய்ய வேண்டிய பிரபல கிரிக்கெட் வீரர்...
ஒவ்வொரு தொடர் முடிந்த பின்பும் தனது ஷூவை ஒட்ட முடியவில்லை என ஜிம்பாப்வே அணி வீரர் வேதனையுடன் பதிவிட்ட பதிவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோடிகளில் புரளும் கிரிக்கெட் வாரியங்கள் ஒருபுறம் இருக்க சில கத்துக்குட்டி அணிகள் ஸ்பான்சர் செய்யும் கூட நிறுவனங்கள் இல்லாமல் நிதி சுமையில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் ஜிம்பாப்வே அணியும் ஒன்று.

1983 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இருந்து சர்வதேச போட்டிகளில் விளையாடிய தொடங்கிய ஜிம்பாப்வே அணி கடந்த சில ஆண்டுகளாக தடுமாறி வருகிறது.
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் நடுவரிசையில் களமிறங்கி விளையாடும் வீரரான ரியான் பர்ல் என்பவர், தனது ட்விட்டர் பதிவில் தனது கிழிந்த ஷூ மற்றும் அதனை ஒட்டுவதற்கான பசை, சரி செய்வதற்கான கருவிகள் உள்ளிட்டவற்றை புகைப்படமாக பதிவு செய்திருந்தார்.

அதில்,“ஒவ்வொரு தொடருக்கு பிறகும் ஷூவை பசையால் ஓட்ட முடியவில்லை. எங்களுக்கு ஸ்பான்சர் வழங்க ஏதாவது நிறுவனம் முன்வருமா? என உருக்கமாக பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவை பார்த்த பூமா நிறுவனம் உதவி செய்ய முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil