கிரிக்கெட் வீரரும், கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவிய செய்தி தவறானது!
ஜிம்பாவே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹீத் ஸ்ட்ரீக் இறந்ததாக பரவிய செய்தி தவறானது.
ஹீத் ஸ்ட்ரீக்
கிரிக்கெட் உலகில் ஜிம்பாவே கிரிக்கெட்டின் முக்கிய வீரராக பார்க்கப்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். இவர் கடந்த 1993ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஜிம்பாவே அணிக்காக 189 ஒருநாள் போட்டிகளிலும், 65 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஜிம்பாவே அணியின் கேப்டனாகவும், தலைசிறந்த பந்து வீச்சாளர் இருந்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2005ம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேசம், ஜிம்பாவே அணிகளுக்கும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் தனது 49 வயதில் நேற்று மரணம் அடைந்தார் என்று செய்திகள் பரவியது. அவர் மரணம் அடைந்ததாக கூறி கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின், வீரேந்திர சேவாக், வாசிம் ஜாபர் போன்ற இந்திய நட்சத்திரங்களும் இயற்கை எய்திய அவருடைய குடும்பத்திற்கு இரங்கல் செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டனர்.
மரணம்
இந்நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் அடையவில்லை என ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலாங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளில்யிட்ட பதிவில் 'ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் தான் கேட்டேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் உயிருடன் இருக்கிறார் மக்களே என பதிவிட்டுள்ளார்.
Thank you for confirming Henry.
— Virender Sehwag (@virendersehwag) August 23, 2023
Glad Yamraj ji overruled. https://t.co/7udI7v6c1V