T20 உலக கோப்பை - 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி வங்காளதேசம் த்ரில் வெற்றி...!
இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி வங்காளதேசம் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
T20 உலக கோப்பை போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டி அடுத்த மாதம் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
வங்காளதேசம் த்ரில் வெற்றி
இன்று நடைபெற்ற T20 உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணியும், ஜிம்பாப்வே அணியும் நேருக்கு நேர் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டி இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.
இப்போட்டியில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தவித்த அணியை வில்லியம்ஸ் சரிவில் இருந்து மீட்டார். இறுதிவரை போராடிய அவர் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வெற்றிக்கு அருகில் வந்த ஜிம்பாப்வே அணியால், இலக்கை கடக்க முடியவில்லை. இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
IT IS NOT OVER!
— ICC (@ICC) October 30, 2022
Zimbabwe require 4 runs off the final ball.#T20WorldCup | #BANvZIM | ?https://t.co/Qi8dhfgeEW pic.twitter.com/ROp5JmLS9T