தமிழக கேரள எல்லையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை: அமைச்சர் சுப்பிரமணியன்
கேரளாவில் ஜிகா வைரஸ் தலைகாட்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
.கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஜிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் நிலையில்அப்பகுதியைச் சேர்ந்த பெண் உள்பட 18 பேருக்கு ஏற்கெனவே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
மேலும். தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறுகையில். :
கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும்
எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் சென்று பரிசோதனை செய்ததில் யாருக்கும் ஜிகா வைரஸ் காய்ச்சல் இல்லை என கூறினார்.
இரண்டு மாதங்களில் 33 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.