"ஜிகா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சிவகங்கையில் கொரோனா தடுப்பு பணிகள்குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
சிவகங்கையில் கொரோனா தடுப்பு பணிகள்குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் , ஜிகா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.
மாவட்டம் தோறும் புற்று நோய் சிகிச்சைக்கென பிரத்யேக மையங்களை துவங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் என்று அவர் கூறினார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.