கான்பூரில் அதிகரிக்கும் ஜிகா வைரஸ் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு

Zika virus Rises Mosquito Kanpur
By Thahir Nov 05, 2021 12:40 PM GMT
Report

கான்பூரில் ஜிகா வைரஸ் பாதிப்பால் மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இந்திய விமான படை அதிகாரிக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஜிகா வைரஸ் இருப்பது சோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய விமான படை தளத்தில் பணியாற்றும் நபர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன.

சோதனையின் முடிவில் மேலும் 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், ஜிகா என்பது கொசுக்களால் பரவும் வைரஸ், எனவே கொசுக்களை ஒழிப்பதே பாதுகாப்பான வழி என்றார்.

நோய் பரவலை கட்டுப்படுத்தவும்,காய்ச்சல் நோயாளிகளைக் கண்டறிதல், தீவிரமாக நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை பரிசோதித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் சுகாதார அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர். நோய் பரவல் காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து வீடு வீடாக சென்று தண்ணீர் தேங்கும் பகுதி,கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதிகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்க அம்மாநில சுகாதாரத்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.