இந்தியாவில் கால் பதித்த ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு பாதிப்பு!

Karnataka India Virus
By Sumathi Dec 13, 2022 06:18 AM GMT
Report

கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ்

கர்நாடகா, ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொசுக்களால் பரவுகிறது. சிறுமிக்கு கடந்த 15 நாட்களாக காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில்,

இந்தியாவில் கால் பதித்த ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு பாதிப்பு! | Zika Virus Alarms India 5 Year Girl In Karnataka

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சோதனையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் 3 மாதிரிகள் புனே ஆய்வகத்திற்கு அனுப்பியதில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

தீவிர கண்காணிப்பு

இதுகுறித்து, பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், எச்சரிக்கையுடன் கூடிய கவனத்துடன் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மேலும், வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மக்கள் பீதி அடைய வேண்டாம்.

ஜிகா வைரஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் விரைவில் அரசு வெளியிடும் என உறுதியளித்துள்ளார்.