சுதந்திரதினத்தன்று மாபெரும் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம் : அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

Volodymyr Zelenskyy Ukraine Russian Federation
By Irumporai Aug 21, 2022 10:02 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரைன் மக்கள் வரும் சுதந்திரதினத்தன்று அதிக எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்ய போர்

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யபடைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யபடைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவத்தினரும் போரிட்டு வருகிறார்கள்.

சுதந்திரதினத்தன்று  மாபெரும் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம் :  அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை | Zelensky Urges Public Aware Of Russia Plans

இதற்கிடையே உக்ரைனில் சுதந்திர தின விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷ்யபடைகள் கடும் தாக்குதலை நடத்த செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

சுதந்திரதினத்தன்று  மாபெரும் தாக்குதலுக்கு ரஷ்யா திட்டம் :  அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை | Zelensky Urges Public Aware Of Russia Plans

எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.