“நான் இரு குழந்தைகளுக்கு தந்தை;ரசாயன ஆயுதங்களா ‘’ - ஆவேசமான ஜெலன்ஸ்கி
எந்தவொரு இரசாயன ஆயுதங்களும் உக்ரைனில் உருவாக்கப்படவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பதில் கூறியுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் நிதியுதவியுடன் உக்ரைன் ஆய்வகங்களில் உயிரியல் ஆயுதங்களின் கூறுகள் தயாரிக்கப்பட்டதாக ரஷ்யா குற்றம் சாட்டியிருந்தது.
மேலும்,ரஷ்யா வழியாக இடம்பெயரும் பறவைகள் மீது வைரஸ் பரப்படுவதாகவும் உக்ரைன் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது தொடர்பாக ரஷ்ய அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில்:
இது என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது.நான் ஒரு நாட்டின் ஜனாதிபதி,அதே சமயம் இரண்டு குழந்தைகளின் தந்தை,எந்த இரசாயனமும் அல்லது வேறு எந்த பேரழிவு ஆயுதங்களும் எங்கள் மண்ணில் உருவாக்கப்படவில்லை என்பது இந்த உலகத்திற்கும் தெரியும்.
அது உங்களுக்குத் தெரியும். ஆனால், உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்த வாய்ப்புள்ளது. அவ்வாறு ரஷ்யா எங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், அது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பெறும் என்று கூறினார்.
Powerful appeal of @ZelenskyyUa in Russian to those who believe in pro-Kremlin propaganda. “I am the president of an adequate country and an adequate people. I am the father of two children. No chemical or any other weapons of mass destruction have been developed on my land.” pic.twitter.com/COe1kTTCEu
— Hanna Liubakova (@HannaLiubakova) March 10, 2022
இந்த நிலையில் ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் துணை தூதர் டிமிட்ரி உக்ரைனில் அமெரிக்காவின் இராணுவ உயிரியல் நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க உலக அமைப்புக்கு கோரிக்கை விடுத்த நிலையில் ரஷ்யாவின் ,இந்த குற்றச்சாட்டுகளை அபாண்டமானது என்று கூறி அமெரிக்கா மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.