கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் : பதட்டத்தில் உக்ரைன்
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி 6 மாதங்களை கடந்து ரஷ்யா போர்தொடுத்து வருகிறது.
உக்ரைன் ரஷ்யா போர்
இந்த நிலையில் போரில் ரஷ்யா கைப்பற்றிய இடங்களை உக்ரைன் மீட்டெடுத்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

இதுபற்றி அந்நாட்டின்ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது என தெரிவித்து உள்ளார்.
ஜெலன்ஸ்கியின் கார் விபத்து
இதனை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக ஜெலன்ஸ்கிக்கு பரிசோதனை செய்தனர். அவருக்கு லேசான காயமே ஏற்பட்டு உள்ளது. அவரது வாகன ஓட்டுனருக்கும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.

இதன்பின்னர், ஆம்புலன்ஸ் ஒன்றில் அவர் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து பற்றி போலீசார் முழு அளவில் விசாரணை நடத்துவார்கள் என நிகிபோரோவ் தெரிவித்து உள்ளார் என அந்த ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
விபத்து நடந்த சிறிது நேரத்திற்குப் ப இரவு தொலைக்காட்சி உரையில், பேசிய ஜெலன்ஸ்கி கார்கிவ் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து தான் திரும்பி வந்ததாக கூறினார்.
ரஷ்ய துருப்புக்களை வெளியேற்றுவதற்கான மின்னல் எதிர் தாக்குதலுக்குப் பிறகு " உக்ரேனியர்கள் மீண்டும் பலர் நினைத்ததைச் செய்ய முடிந்தது," Zelensky கூறினார்.