சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகை : பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

By Irumporai May 18, 2022 04:12 AM GMT
Report

'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஸாரா பைத்தியன் இவர் இளம் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்திய வழக்கில் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.

ஸாரா பைத்தியன் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகை ஸாரா பைத்தியன் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகை :  பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் | Zara Phythian Jailed For Child Sexual Abuse Case

அதன்படி சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை செய்ய உடந்தையாக இருந்தது மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக நடிகை ஸாராவின் கணவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் .

பலாத்கார வழக்கில் நடிகை ஸாராவின் கணவர் விக்டர் மார்க்கிற்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ஸாராவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது ஹாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.