தலித் தலைவரின் வாயிலிருந்து உணவை எடுத்து சாப்பிட்ட எம்எல்ஏ - நெகிழ்ச்சி சம்பவம்!
தலித் தலைவரின் வாயிலிருந்து உணவை எடுத்து சாப்பிட்ட கர்நாடகா எம்எல்ஏ ஜமீர் அஹமது கான்.
கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ, ஜமீர் அஹமது கான் முஸ்லிம் – பட்டியனத்தவரின் சகோதரத்துவத்தை பறைசாற்றும் வகையில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் தலித் அமைப்பின் சாமியார் ஒருவரும் கலந்து கொண்டார். அப்போது, அந்த சாமியாருக்கு ஜமீர் அஹமது கான் இனிப்பை ஊட்டி விட்டார்.
பின் தான் ஊட்டிவிட்ட இனிப்பை அந்த தலித் தலைவரின் வாயிலிருந்து எடுத்து சாப்பிட்டார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து ஜமீர் அஹமது கான் கூறுகையில், சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாகவும், பயங்கரவாதத்தை வைத்து சிலர் சமுதாயத்தினருக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.