இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் முழு காரணம் - ஜாகீர்கான் குற்றச்சாட்டு
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்த இந்திய அணி மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. குறிப்பாக நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்தியா வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்ததை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இப்போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இலங்கை அணியுடனான இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் உலகில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங்கில் சொதப்பியதே காரணம் என முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் பந்துவீச்சாளர்களின் கடுமையான போராட்டத்தின் மூலமே போட்டி கடைசி வரை வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.