அவனுங்க ரொம்ப ஆபத்தானவுங்க இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர் ஜாகீர் கான்

T20 Zaheer Khan World Cup
By Thahir Oct 28, 2021 02:00 PM GMT
Report

 இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் நடைபெற உள்ள போட்டி குறித்து தனது கருத்தை பத்திரிகையாளர்களின் சந்திப்பின் பொழுது பேசியுள்ளார்.

அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் அதனை தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் பாகிஸ்தான் அணி மிக சிறந்த முறையில் செயல்பட்டு நியூசிலாந்து அணியையும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை தழுவிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வருகிற அக்டோபர் 31-ஆம் தேதி மோத உள்ளது.

தான் எதிர்கொண்ட முதல் போட்டியில் இரண்டு அணிகளுமே தோல்வியை தழுவியதால் இந்த போட்டியில் எப்படியாவது வெல்லவேண்டும் என்று இரண்டு அணிகளும் தீவிர திட்டங்களை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது,

இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள் நெருங்க நெருங்க இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது பேசி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தனது கருத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், நியூசிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக விளையாடி வருகிறது,

ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை தழுவியது, ஆனால் அந்த போட்டியில் நியூசிலாந்து அணி மிக எளிதாக தோல்வியை சந்திக்க வில்லை மாறாக எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று மிகத் தீவிரமாக போராடிதான் தோல்வியைத் தழுவியது.

இதனால் அடுத்து வரும் போட்டிகளில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி மிகத் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று ஜாகிர் கான் அதில் பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி சளைத்தவர்கள் கிடையாது, அவர்களுடைய திறமை நமக்கு நன்றாகவே தெரியும்,

ஆனால் இந்திய அணி தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டியாகும்இதில் எப்படியாவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ஜாகீர்கான் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கினார்.