இந்திய அணியின் மாஸ் காட்டும் இரண்டு வீரர்கள் இவர்கள் தான் - ரசிகர்கள் மகிழ்ச்சி

Deepakchahar INDvSA INDvWI Zaheerkhan Shardultakur
3 மாதங்கள் முன்

ஆடும் லெவனில் ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவருக்கும்  இடம் கொடுப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என முன்னாள் வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரைல் 3-0 என்ற கணக்கிலும் இழந்து இந்திய அணி அதிர்ச்சி கொடுத்தது. 

கிரிக்கெட் உலகின் நம்பர் 1 அணியாக கருதப்படும் இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அடுத்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் மாஸ் காட்டும் இரண்டு வீரர்கள் இவர்கள் தான் - ரசிகர்கள் மகிழ்ச்சி

அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரான ஜாகீர் கான், இந்திய அணிக்கான தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில் தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகிய இருவருக்கும் ஒன்றாக ஆடும் லெவனில் இடம் கொடுப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். தீபக் சாஹர் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கிறார்.

பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவது அவரது தனிச்சிறப்பு. ஷர்துல் தாகூரையும் குறையே சொல்ல முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் ஷர்துல் தாகூரும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார், எனவே இருவருக்கும் ஒன்றாக ஆடும் லெவனில் இடம் கொடுத்தால் அது பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தான் கொடுக்கும் என கூறியுள்ளார். 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.