ரஹானே தேவையில்லை...இடம் கொடுக்காதீர்கள் : எச்சரிக்கும் முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் சிறிதும் ஃபார்மில் இல்லாத ரஹானே விளையாட அதிக வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி வீரர் ரஹானேவுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கக் கூடாது என்று முன்னாள் வீரர் ஜாகீர்கான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வீரர்களை மாற்றுவது பவுலிங்கில் கைகொடுத்து வரும் நிலையில் அதே மாற்றத்தை பேட்டிங்கில் கொண்டு வர இந்திய அணி ஏன் தயக்கம் காட்டி வருகிறது என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
அப்படி செய்திருந்தால் ரஹானே கடந்த போட்டியிலேயே கழட்டி விடப்பட்டு இருப்பார் என்றும், சரியான ஃபார்மில் இல்லாத வீரருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக அணி செயல்பட வேண்டும் எனவும் ஜாகீர்கான் கூறியுள்ளார்.