இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ஜாகீர் கான் கொடுத்த எச்சரிக்கை...! சொன்னது என்ன?

Cricket
By Nandhini Nov 12, 2022 02:33 PM GMT
Report

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பையில் நேற்று முன்தினம் அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

டி20, ஒருநாள் டெஸ்ட் தொடர்

இந்நிலையில், இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. முதலில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடர்களில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடர் வரும் நவம்பர் 18ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்த உள்ளார். ஒருநாள் போட்டியில் தவான் அணியை வழிநடத்த உள்ளார்.

zaheer-khan-cricket-sport-india-team

ஜாகீர் கான் எச்சரிக்கை

இந்நிலையில், இத்தொடரில் விளையாடிய குல்தீப் சென், உம்ரான் மாலிக்குக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை கொடுத்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், இத்தொடரில் குல்தீப் சென் மற்றும் உம்ரான் மாலிக்குக்கு சிறந்த கற்றல் அனுபவம் கொடுக்கும். நியூசிலாந்தில் உள்ள மைதானங்களில் உம்ரான மாலிக் எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக உள்ளேன்.

நியூசிலாந்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை சொல்கிறேன். வெலிங்டனில் பலத்த காற்று வீசும். மிகவும் கவனமாக இருங்கள்,

அதற்கு எதிராக ஓடுவது மிகக் கடினம். காற்றின் திசையிலேயே ஓடுகிறோம் என்றால் அது நம்மை தள்ளக்கூடும். எனவே எல்லா வகையிலும் தயாராக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.