முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர்கான் வசிக்கும் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!

Fire Accident
By Nandhini Nov 01, 2022 05:31 AM GMT
Report

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர்கான் வசிக்கும் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜகீர்கான்

இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளராக இருந்தவர் ஜகீர்கான். இவர் கடந்த 2000ம் ஆண்டில் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 200 ஒருநாள் போட்டிகளின் இந்தியாவுக்காக விளையாடி 282 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

இடதுகை வேப்பந்து வீச்சாளரான அவர் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளும், 17 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜகீர்கான் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார்.

zaheer-khan-building-fire-accident

பயங்கர தீ விபத்து

இந்நிலையில், புனே, கோந்த்வாவின் லுல்லாநகரில் உள்ள G+7 மாடி கட்டிடமான மார்வெல் விஸ்டாவில் உள்ள வீட்டிற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் பிடித்த தீ மளமளவென மேற்கூரையில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. உடனடியாக அந்த மாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர்.

இது குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிடத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானின் சிறந்த உணவகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீ விபத்துக்கான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.