விராட் கோலிக்கு சாஹல் செய்த துரோகம் - மைதானத்தில் கதறி அழுத ரசிகை

viratkohli IPL2022 RCBvRR RRvRCB yuzvendrachahal TATAIPL
By Petchi Avudaiappan Apr 06, 2022 03:33 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியில் நடைபெற்ற சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்சி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களம் கண்ட ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் 70, ஹெட்மேயர் 42, தேவ்தத் படிக்கல் 37 ரன்களும் விளாச அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது.

பின்னர் பேட் செய்த பெங்களூரு அணியில் கேப்டன் டூபிளெஸிஸ் 29, அஜய் ராவத் 26, தினேஷ் கார்த்திக் 44, ஷபாஸ் அகமது 45 ரன்கள் எடுக்க கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதனிடையே இப்போட்டியில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி 5 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யுவேந்திர சாஹல் வீசிய ஓவரில் கோலி அடித்த பந்து அருகிலேயே விழுந்தது. இதனால் அவசர அவசரமாக சிங்கிள் எடுக்க ஓடிய போது சாதூர்யமாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் வேகமாக ஓடிவந்து டைவிங்கில் பந்தை எடுத்து நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த சாஹலிடம் வீசினார். 

கோலி தன்னுடைய பழைய கேப்டன் என்று சற்றும் யோசிக்காத யுவேந்திர சாஹல் ஸ்டம்ப் அவுட் செய்து வெளியேற்றினார். இதனால் ஒட்டுமொத்த பெங்களூரு ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக விராட் கோலி அவுட்டாகி பெவிலியன் சென்றதை பார்த்த ரசிகை ஒருவர் மிகுந்த ஏமாற்றத்துடன் கண்ணீர் விட்டு அழுதார். என்னதான் இருந்தாலும் கொஞ்சம் கூட சாஹலுக்கு விஸ்வாசம் இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.