முதல் ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்த யுஸ்வேந்திர சாஹல் - குவியும் பாராட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் அதிவேகமாக 100 விக்கெட்களை எடுத்த 5வது இந்திய அணி வீரர் என்ற பெருமையை சாஹல் படைத்தார்.
முதலிடத்தில் முகமது ஷமியும், 2வது இடத்தில் பும்ராவும், 3வது இடத்தில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 4வது இடத்தில் இர்ஃபான் பதானும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.